--- --:--:-- --

ஒரே ஒரு Item பாடலுக்கு நடனம் ஆட கீர்த்தி சுரேஷிற்கு சம்பளம் இவ்வளவா?

11

டிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கான கதைகளும் இப்போது அதிகம் வருகின்றன.பெண்களை மையப்படுத்திய கதைகளில் முன்பெல்லாம் சிலதே வந்தது, ஆனால் இப்போதெல்லாம் மக்களிடம் பெரிய வரவேற்பு பெறுகிறது. நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி, சமந்தா என பல நடிகைகள் நாயகி மையப்படுத்திய கதைகளில் நடித்து சாதித்துள்ளனர்.

 

 

அந்த லிஸ்டில் நடிகை கீர்த்தி சுரேஷும் இடம்பெறுகிறார். அடுத்தடுத்து நடிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் வலம்வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர். விஜய் தேவரகொண்டாவுடன் ரவுடி ஜனார்த்தனா, அனில் ரவிபுடி இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக நிறைய படங்கள் கமிட்டாகியுள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ், நேச்சுரல் ஸ்டார் நானி ஹீரோவாக நடிக்கும் தி பாரடைஸ் படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக் கொண்டாராம்.

 

 

படத்தில் 4 நிமிடம் வரும் இந்த பாடலில் நடனம் ஆட கீர்த்தி சுரேஷ் ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்கியதாக வதந்திகள் பரவியுள்ளன. இதுகுறித்து படக்குழு தரப்பில் கீர்த்தி சுரேஷ் சம்பளம் குறித்து கூறவில்லை என்றாலும் ரூ. 1 கோடி வாங்கவில்லை என்பதை மட்டும் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon