பெண் நீதிபதியை பாய்ந்து தாக்கிய குற்றவாளி..65 ஆண்டு சிறை..!
அமெரிக்காவில் பெண் நீதிபதியை குற்றவாளி ஒருவர் பாய்ந்து வந்து தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. விகாஸ் மாகாணத்தில் கடந்த செப்டம்பரில் நடந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு நீதிமன்ற நீதிபதி மேரி தண்டனை அறிவித்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கிருந்த குற்றவாளி திடீரென நீதிபதியின் மேஜை மீது குதித்து பெண் நீதிபதியை தாக்கினார். உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் குற்றவாளியை பிடித்த நிலையில் லேசான காயத்துடன் நீதிபதி தப்பினார். இதனை அடுத்து குற்றவாளிக்கு 65 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.





