--- --:--:-- --

28ம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம்..!

4

டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து வருகிற 28ஆம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என நாகை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

 

திருவாரூரில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

 

அப்பொழுது டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான ரயில்கள் குறித்த கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது என்றும் ஆனால் தென்னக ரயில்வே கோரிக்கையை அலட்சியப்படுத்தி இருந்து வருகிறது என குற்றம் சாட்டியுள்ளனர்.

 

மேலும் டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து வருகிற 28ஆம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தனர்.

 

Right Menu Icon