காங்கிரஸ் அதற்கு கல்லறை தோண்டுவதையே பணியாக கொண்டுள்ளது : பிரதமர் மோடி
ஏழை மக்களும் பணத்தை கொள்ளை அடித்த காங்கிரஸ் கட்சி தனக்கு கல்லறை தோண்டுவதையே தலையாய பணியாக கொண்டுள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைப்பதற்காக மாண்டியா வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
காரில் ஊர்வலமாக சென்ற பிரதமர் மோடியை சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி இந்திய மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பாஜக அரசு உழைத்து வருவதாக தெரிவித்தார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியோ தனக்கு கல்லறை தோண்டும் பணியை செய்து வருவதாக குற்றம் சாட்டினார். நாட்டு மக்களின் ஆசீர்வாதம் தனக்கு பாதுகாப்பு அளிப்பதாக குறிப்பிட்ட பிரதமர் ஏழை மக்களின் வளர்ச்சியில் முக்கியம் என தெரிவித்துள்ளார்.
சிறந்த கட்டமைப்புக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கி மக்களின் வாழ்க்கை தரம் உதவும் எனவும் பிரதமர் மோடி சுட்டிக் காட்டியுள்ளார்.





