--- --:--:-- --

ஜாதி மறுப்பு திருமண விவகாரத்தில் தீண்டாமை செயல் நடைபெறுகிறதா..?

8

திருச்சியில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி விழாக்களில் வழிபாடு செய்வதை தடுப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

திருச்சி புலிவலம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். விழா கமிட்டி குழுவினர் தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும் கோவிலுக்குள் வழிபடாமல் மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

விதவை திருமணம் செய்த சிலரையும் வழிபாட்டுக்கு அனுமதிக்காமல் தீண்டாமை செயலில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, ஆர்.சுப்பிரமணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

இந்நிலையில் கிராமத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை கோவிலில் வழிபாடு செய்ய விடாமல் தீண்டாமை செயல் நடைபெறுகிறதா என்பது குறித்து ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 28ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

 

Right Menu Icon