காஞ்சியில் பரபரப்பு.. கவுன்சிலர்கள் தொடர் போராட்டம்.. திடீரென மயங்கி விழுந்த பெண் கவுன்சிலர்..!
தங்களின் வார்டுகளில் திட்ட பணிகள் மேற்கொள்ளாமல் அதிகாரிகள் புறக்கணிப்பதாக கூறிய எதிர்கட்சி கவுன்சிலர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இனி மாநகராட்சி ஆணையர் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த பொழுதே பெண் கவுன்சிலர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் கவுன்சிலர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.





