மேல் பாதியில் இரு தரப்பினர் இடையே மோதல்.. நள்ளிரவில் பதற்றம்..!
விழுப்புரம் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் கோவிலுக்குள் பட்டியல் இன மக்கள் நுழைய மறுக்கப்பட்டதால் இரு பிரிவினர் இடையே மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து ஜூன் மாதம் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் முடிவுக்கு வராத நிலையில் கோலியனூர் கூட்டுசாலையில் ஒரு உணவகத்தில் மேல்பாடி கிராமத்தை சேர்ந்த இரு பிரிவை சேர்ந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரில் வளவனூர் காவல்துறையினர் இரண்டு பேரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அவர்களை விடுவிக்க வலியுறுத்தி மேல் பாதி கிராமத்தினர் நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு மறியல் செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தி கலைத்தனர்.






