--- --:--:-- --

ஆர்யன் கானுடன் பாஜக பிரமுகர் சென்றதாக புகார்..!

1

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான ஆர்யன்கான் உள்ளிட்டோரை அதிகாரிகள் அழைத்து செல்லும் பொழுது அவருடன் பாரதிய ஜனதா பிரமுகர் சிலர் இருந்தது குறித்து தேசியவாத காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

 

மும்பையிலிருந்து கோவா செல்லும் கப்பலில் போதை விருது நடத்திய புகாரில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 18 பேரை போதை பொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கைது செய்து இருக்கிறார்கள்.

 

அவர்களை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் பொழுது உடன் கே.பி.கோஸ்வாமி என்ற நபரும் செல்வதாக தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

 

அவர் தன்னை பாஜக துணைத் தலைவர் என குறிப்பிட்டு இருப்பதாகவும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் உடன் அவர் படமெடுத்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

இதற்கிடையில் ஆர்யன்கானை விசாரணைக்கு சென்ற பொழுது உடன் இருந்தவர்களில் ஒருவரான மணிக் மன்சாலி என்பவர் தான் பாஜகவின் விசுவாச தொண்டர் என்றும் போதை மருந்து கட்டுப்பாட்டு துறையில் ஒரு பகுதியாக இருந்து அவர்களுக்கு தகவல்களை வழங்கி வந்ததாகவும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Right Menu Icon