கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வி கல்லூரி முதல்வர் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவரை மாற்ற வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி முதல்வர் ஜார்ஜ் whatsapp மூலம் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த ஜார்ஜ் ஆபிரகாம் மீண்டும் கல்லூரிக்கு வர தொடங்கி இருப்பதாக தெரிகிறது. அவருடன் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே ஜார்ஜ் ஆபிரகாமை மாற்ற கோரி மாணவர்கள் போராட்டத்தில் குறித்துள்ளனர். வசூலிக்கப்பட்ட கல்லூரி கட்டணத்தை திருப்பித் தரவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.





