--- --:--:-- --

மத்திய அரசு ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் எண்ணத்தில் செயல் பட்டு வருவதாக கோவை காந்திபுரம் பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு !!!

7.4

கோவை மாவட்ட ஆட்டோ கூட்டு கமிட்டியின் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் இன்னல்களை மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டன முழங்கங்களாக தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக மத்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி தமிழக மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சீரழிக்கும் வேலைகளை செய்து வருவதாக கோசங்களை எழுப்பி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஷாஜகான் கூறுகையில் மத்திய, மாநில அரசுகள் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காக்க சரியான நடவடிக்கை எடுக்க தவறி வருகின்றது எனவும்,இது கண்டிக்க தக்க செயல் எனவும், கொரோனாவை காரணமாக வைத்து அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு மக்கள் விரோத செயலை செய்து வருகின்றது எனவும் குற்றஞ் சாட்டினர்.

மேலும், ஆட்டோ தொழிலாளர்கள் கொரோனா தொற்று தடுப்பு பணிகளினால் கடந்த நான்கு மாத காலமாக வேலையின்றி தவித்து வருகின்றனர் எனவும், நலிவடைந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாதம் 5,000வீதம்,ஆறு மாதங்களுக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.அரசு ஆயிரம் ருபாயை வழங்கி விட்டு டாஸ்மாக் மூலமாக அதையும் பிடுங்கி கொண்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட ஆட்டோ கூட்டு கமிட்டியின் சார்பில் எல்பிஎப் வணங்காமுடி, SDTU ஷாஜகான், எம்எல்எப் ஷாஜகான் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon