கொரொனா தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு 1 ரூபாய்க்கு காபி..!
செங்கல்பட்டு அருகே கொரொனா தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு 25 ரூபாய் மதிப்புள்ள காபி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
செங்கற்பட்டு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் முரளி என்பவர் காபி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இதனிடையே கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை காண்பித்தால் 25 ரூபாய் மதிப்பிலான காசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஒரு நபருக்கு வாரம் ஒரு முறை என்று கணக்கில் நான்கு வாரத்திற்கு ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ஒரு ரூபாய் நிவாரண நிதிக்காக கொடுக்கப்பட்டு வருகிறது.






