முதலமைச்சரின் செயலாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அண்ணாதுரை, விஷ்ணு நியமனம்
தமிழக முதலமைச்சரின் செயலாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருவரை நியமித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமான அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, முதலமைச்சரின் தற்காலிகச் செயலாளர்-III (Secretary-III) என்ற புதிய பணியிடம் உருவாக்கப்பட்டு, அந்தப் பதவியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்த டாக்டர் ஏ. அண்ணாதுரை, ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கூடுதல் செயலாளராக இருந்த வி. விஷ்ணு, ஐ.ஏ.எஸ் இடமாற்றம் செய்யப்பட்டு முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக (Additional Secretary to Chief Minister) நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநரின் உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், முதலமைச்சரின் புதிய செயலாளர்-III பணியிடமானது ஒரு ஆண்டு காலத்திற்குச் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





