இன்று ஊட்டி செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்..!
சென்னையிலிருந்து இன்று ஊட்டி செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சட்டபேரவையில் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
இன்று விமானம் மூலம் குடியரசு தலைவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி புறப்பட்டு செல்கிறார். கார் மூலம் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.
பின்னர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் புகைப்பட கண்காட்சியை பார்வையிடும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தோழரின மக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்ல இருக்கிறார். பின்னர் பைகாரா செல்லும் அவர் படகு சவாரி மேற்கொள்ளவுள்ளார்.
அன்றிரவு நூற்றாண்டு பழமை வாய்ந்த திரையரங்கை பார்வையிட்ட பிறகு மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு திரும்புகிறார். ஆறாம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் கோவை செல்லும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.






