--- --:--:-- --

15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி தந்தையுடன் ஏற்பட்ட மோதலில் விபரீதம்!

download (8)

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்ய முயற்சி செய்த இளைஞர் இரும்பு கம்பியால் தாக்கியதில் சிறுமியின் தந்தையை உயிரிழந்தார். திருப்பூரை சேர்ந்தவர் இளைஞர் முருகேஷ். இவர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

 

அங்கு உடன் வேலை செய்த சத்தியமங்கலம் 4ரோடு கணபதி சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த மே மாதம் சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளார் முருகேஷ். அதன்பிறகு சிறுமியை பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை ஜெயராஜ் கண்டித்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி ஜெயராஜிடம் முருகேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றவே கைகலப்பு ஏற்பட்டது. முருகேஷ் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை வழக்குப்பதிவு செய்து முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon