கிராமங்களை தேடி குடிமைப்பொருள் பிரிவு !!!
தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக ரேஷன் கார்டுகளுக்கான அரிசி,கோதுமை,சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பெறுவதற்காக மக்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கி வருகிறது.ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்த்தல்,நபர் நீக்கம்,பெயர் திருத்தம்,முகவரி மாற்றம்,புகைப்பட மாற்றம்,புதிய ஸ்மார்ட் கார்டு பெற வேண்டுதல் உள்ளிட்டவற்றிற்காக இ – சேவை மையங்களை தேடிச்செல்லும் நிலை ஏற்பட்டது.இதனால் மக்களுக்கு பல்வேறு வகைகளில் அலைச்சல் ஏற்பட்டது.

இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு கிராமங்கள் தோறும் குடிமைப்பொருள் பிரிவிற்கான மக்கள் குறைதீர் முகாம் நடத்த உத்தரவிட்டது.இம்முகாமில் ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்த்தல்,நீக்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாதமொருமுறை ஒரு ஊராட்சியில் நடத்த உத்தரவிட்டது.அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவர்களின் உத்தரவின் படி வட்ட வழங்கல் அலுவலர் ரங்கராஜன் தலைமையிலான குடிமைப்பொருள் பிரிவினர் இன்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்த்தல்,நீக்கல்,பெயர் திருத்தம்,முகவரி மாற்றம்,புகைப்படம் மாற்றம்,புதிய ஸ்மார்ட் கார்டு பெற வேண்டுதல் உள்ளிட்ட குறைகளை தெரிவித்து உடனுக்குடன் தீர்வினை பெற்றுச்சென்றனர்.இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சதீஷ் கூறுகையில் முன்பெல்லாம் ஸ்மார்ட் கார்டு தொடர்பான திருத்தங்களை செய்ய இ – சேவை மையங்களை தேடிச்செல்லும் நிலை ஏற்பட்டது.இதனால் தங்களுக்கு அலைச்சல் ஏற்பட்டது.

தமிழக அரசின் இந்த மக்கள் குறைதீர் முகாமினால் தங்களது கிராமங்களை தேடி குடிமைப்பொருள் பிரிவினர் வந்து திருத்தங்களை ஆவணங்களை சரிபார்த்து சில மணித்துளிகளில் செய்து தருவதால் அலைச்சல் இல்லை.இந்த முகாமினை நடத்த உத்தரவிட்ட தமிழக அரசிற்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தார்.இம்முகாமில் வருவாய் ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட குடிமைப்பொருள் பிரிவினர் உட்பட பொதுமக்கள் பலர் கொண்டனர்.





