சித்ரா பௌர்ணமி: கிரிவலப் பாதையில் சிறப்பு ஏற்பாடு
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலை சுற்றி 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
கிரிவலப் பாதையில் போதிய கழிவறைகள், குடிநீர் வசதிகளை செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சித்ரா பெளர்ணமியான மே 11 இரவு 8.47க்கு தொடங்கி மே 12, இரவு 10.43 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம்.





