காணொளி மூலம் 3 கலை கல்லூரிகளை தொடங்கி வைத்த முதல்வர்..!
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூன்று புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஒட்டன்சத்திரம், விளாத்திகுளம், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் மூன்று புதிய கல்லூரிகள் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலர் இறையன்பு அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் அரசியல் தொழிற் பயிற்சி மையங்களில் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், விடுதிகள் போன்றவற்றை முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற 50 ஆயிரத்து 721 உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.






