இன்று டிஸ்சார்ஜ் ஆகும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் நலமுடன் உள்ளார் என்றும் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கடந்த 14ஆம் தேதி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தொடர் சிகிச்சையில் உள்ள முதலமைச்சரின் உடல்நிலை குணம் அடைந்துள்ளதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் கொரோனாவுக்கான தனிமைப்படுத்துதல் முடிவதால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவித்துள்ளது. மேலும் அவர் ஒரு வாரத்திற்கு வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.





