--- --:--:-- --

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு..!

7

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்கிறார்.

 

முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று வளர்ச்சித் திட்டப் பணிகள், கொரொனா தொற்று நடவடிக்கைகள் போன்றவை குறித்து ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று ஆய்வு நடத்துகிறார்.

 

இந்த மூன்று மாவட்டங்களில் நிறைவுபெற்ற 13 திட்டப் பணிகளை தொடங்கி வைத்து மூன்று பணிகளுக்கான அடிக்கல் நாட்டுகிறார். அதைத் தொடர்ந்து 18,589 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon