--- --:--:-- --

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் “பரோல்” விடுப்பு..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

cvbn

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 28 ஆண்டு தளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை,

 

இதில், பேரறிவாளன் உடல் நிலை அடிக்கடி பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில் அவருடைய தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறான்.

 

தற்போது என்னுடைய மகன் புழல் சிறையில் அடைப்பட்டுள்ளான்.புழல் சிறையில் ஏற்கனவே 50 கைதிகள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் பேரறிவாளனுக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பேரறிவாளனுக்கு 90 நாள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரிக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர்.

 

அற்புதம்மாளின் மனுவை தமிழக அரசும் சிறைத் துறையும் நிராகரித்துவிட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் 30 நாள்கள் விடுப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு வாரத்தில் பேரறிவாளனை பரோலில் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon