--- --:--:-- --

பஞ்சாப்பில் மொபைல் மற்றும் இணைய சேவைகளுக்கு தடை..!

4

ஞ்சாபில் பதற்றமான நிலை தொடர்வதை அடுத்து அங்கு தொடர்ந்து இணைய சேவைகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் காலிஸ்தான் என்று தனி நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி செயல்பட்டு வரும் அமைப்பானது ஏப்ரல் 29 ஆம் தேதியை காலிஸ்தான் தனிநாடு தினமாக அறிவித்தது.

 

இந்தநிலையில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தை சேர்ந்த சிவசேனா கட்சியினர் பேரணி நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் போட்டி பேரணி நடத்தினர்.

 

இரண்டு பேரணிகளும் எதிரெதிரே சந்தித்தபொழுது ஒருவரை ஒருவர் கற்களை வீசியும், கல்களைக் கொண்டும் தாக்கிக் கொண்டனர். இதைதொடர்ந்து அந்த பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. இந்த வன்முறையால் பாட்டியாலாவில் 12 மணி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு முதல் அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon