சுவாமிமலையில் தேரோட்டம் ரத்து..!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூரில் கனமழை பெய்து வருவதால் சுவாமிமலை முருகன் கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று நடைபெறவிருந்த தேரோட்டம் ரத்தானது. அலங்கரிக்கப்பட்ட தேர் தயாராக இருந்த நிலையில், ரத்தானதால் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் சோகத்தில் மூழ்கினர்.





