கணித ஆசிரியரை உடனே மாற்றுங்கள்.. மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் அளித்த சிறுவர்கள்..!
புதுக்கோட்டை மாவட்டம் அரசு பள்ளியில் கணித ஆசிரியர் பல மாதமாக பள்ளிக்கு வரவில்லை என கூறி பெற்றோர் மாணவர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
13 க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் இந்த பள்ளியின் கணித ஆசிரியர் முறையாக பள்ளிக்கு வராததால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். அவரை பணியிடம் மாற்றம் செய்து வேறு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.





