உயிர் காக்கும் மருந்துகள் இன்றி தவிக்கும் பாகிஸ்தான்..!
உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளை தங்கள் நாட்டிற்கு தந்து உதவுமாறு ஈரானில் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார சிக்கல் ஆறு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.
அன்னிய செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களை கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய இயலாத நிலை உள்ளது. நோயாளிகளின் உயிர்காக்க அத்தியாவசிய மருந்துகளை கூட இறக்குமதி செய்ய இயலாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் மருத்துவ சேவைகள் துறை அமைச்சர் ஈரான் தூதரை சந்தித்து பேசினார். அப்பொழுது அத்தியாவசிய மருந்துகளை விரைந்து உதவுமாறு ஈரான் தூதரை பாகிஸ்தான் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.





