--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு ..!

7

மிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் இதனால் பிற்பகல் முதல் காலை வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே பொதுமக்கள் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும், பருத்தி ஆடைகளை அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon