--- --:--:-- --

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

6

மிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையை பொருத்தவரை கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon