--- --:--:-- --

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

13

மிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்ட மற்றும் அதனை ஒட்டிய உள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும், ஜூன் 21-ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கேரளாவின் கடலோரப் பகுதிகளிலும், தென் மேற்கு, மத்திய மேற்கு, அரபிக் கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால்இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon