17 வயது சிறுமியை திருமணம் செய்து வன்கொடுமை..!
17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். குன்னத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த தங்கராஜ் என்பவர் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






