--- --:--:-- --

தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

8

சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை முதல் வெயில் அதிகரிக்கும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி தூத்துக்குடியில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

நாளை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

அதே நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon