கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பில் டெல்டா மாவட்டம் தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் லட்சத்தீவு மற்றும் மால தீவு பகுதிகளில் மே 14ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






