--- --:--:-- --

தமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவாகின! சென்னையில் குறைவு!!

Sathyaprathasaho 1

தமிழக சட்டசபை தேர்தலில் தோராயமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவுவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 7 மணிக்கு நிறைவடைந்தது. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு, பின்னர் மந்தமடைந்தது. அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

 

காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 மணிக்கு மேல் 7 மணி வரை கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யேகமாக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அனைத்து ஓட்டுப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவைகள் அறைகளில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டு, அந்த இடத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

இன்றைய தேர்தலில் தமிழகத்தில் தோராயமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவுவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். இது குறித்து பேட்டியளித்த அவர், தமிழகத்தின் முழுமையான வாகுப்பதிவு சதவீதம் இன்னமும் வரவில்லை. தொலைபேசி மூலம் வாங்கிய தகவலின்படி 71.79% வாக்குகள் பதிவாகி இருப்பது தோராயமாக தெரிகிறது.

 

அதிகபட்சமாக கள்ளக்குறியில் 78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த பட்சம் சென்னையில் 59.40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது.அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு எண்ணிக்கை நள்ளிரவில் வெளியாகும். எங்கும் மறுவாக்குப்பதிவு நடப்பதற்கான தேவை தற்போதைய சூழலில் ஏற்படவில்லை என்றார்.

Leave a Reply

Right Menu Icon