கொரானா வைரஸ் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு!!
கொரோனா வைரஸ் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி மூலம் உதவிகள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரானா வைரஸ் அச்சுறுத்தல் இந்தியாவுக்கும் சவால் விடும் வகையில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கூடி வருகிறது.இந்த வைரஸ் தொற்று இதுவரை 90 பேருக்கு உறுதி செய்யப்பட்டு , 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரானா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரானா வைரஸ் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.இது தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் உத்தரவில்,கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, மாநில அரசுகளின் பேரிடர் நிவாரண நிதி மூலம் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுகளையும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே ஏற்றுக் கொள்ளும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




