பிரபல டிக் டாக் சுகந்தி கைது..!
ஒத்தக்கடையை சேர்ந்த பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு மதுரை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் தனது புகைப்படத்தை ஆபாசமாக பதிவேற்றி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டிருக்கின்றனர்.
இதனடிப்படையில் சுகந்தி கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திவ்யாவுக்கும் சுகந்திக்கும் பிரபல சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
சமூக வலைதளங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதும் கைது செய்யப்படுவதும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.






