கொரொனா ஊரடங்கை மீறி விபரீதமாக பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர்கள்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபரீத விளையாட்டுடன் இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே பரம்பை எனும் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றிணைந்து நண்பர் ஒருவருக்கு பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர்.
முதலில் கேக் வெட்டி கொண்டாடிய அவர்கள் திடீரென பிறந்தநாள் கொண்டாடும் இளைஞரை மின் கம்பியில் கட்டி வைத்ததோடு அவரது உடலில் தயிர், முட்டை, தக்காளி போன்றவற்றை அடித்து பூசுவதும், மாட்டு சாணியை கரைத்து தலையில் ஊற்றியும் கொண்டாடியுள்ளனர்.







