--- --:--:-- --

கேரள வயநாடு விபத்தின் சி‌சி‌டி‌வி காட்சி வெளியானது!

8

கேரள மாநிலம் வயநாட்டில் வேகமாக சென்ற பேருந்து விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சுல்தான் பாத்ரே நகரில் குறுகலான சாலையில் அதிவேகமாக வந்த பேருந்து திடீரென சாலையின் வலது பக்கம் திரும்ப முயன்றதில் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்து சிறிய தட்டு போன்ற அமைப்பில் ஏறி மரத்தின் மீது மோதியது.

 

இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து உள்ளே இருந்தவர்கள் வெளியே விழ சில நொடிகளிலேயே பேருந்து மொத்தமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon