--- --:--:-- --

டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு!

16

தமிழகத்தில் 3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக எந்தெந்த டாஸ்மாக் கடைகளுக்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பதை முகவரி விவரங்களுடன் அளிக்க மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

அதிக அளவில் விற்பனை நடக்கும் டாஸ்மாக் கடைகள், ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடந்துள்ள டாஸ்மாக் கடைகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு முன்னுரிமை தந்து சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

 

ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் தலா 2 சிசிடிவி கேமராக்கள் வீதம் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் 6,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. சென்னை மண்டலத்தில் 535 சிசிடிவி கேமராக்களும், கோவை மண்டலத்தில் 450 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

 

மதுரை மண்டலத்தில் 755 சிசிடிவி கேமராக்கள் சேலம் மண்டலத்தில் 565 சிசிடிவி கேமராக்கள் திருச்சி மண்டலத்தில் 695 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

Leave a Reply

Right Menu Icon