த.வெ.க கட்சி தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு?
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தலைவருமான விஜய் மீது வாக்குச்சாவடியில் தேர்தல் விதியை மீறியதாக புகார் எழுந்துள்ளது.தமிழகம், புதுவை உள்ளிட்ட 21 மாநிலங்களில் நேற்று முன்தினம் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழக அரசியல் தலைவர்களும், திரைபிரபலங்களும் காலையிலேயே ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
இதேபோல் நடிகர் விஜய்யும் நீலங்கரையில் உள்ள வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த போது கூட்டம் அலை மோதியது.விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்தார்.
அதில் வாக்களிக்க வரும் போது 200க்கும் மேற்பட்ட நபர்களை அத்துமீறி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் உள்ளிட்ட நடவடிக்கையில் நடிகர் விஜய் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்தவர்களை அவமதித்து, வரிசையில் நின்று வாக்களிக்காமல் போலீசாரின் உதவியோடு தனது வாக்கை விஜய் அளித்துள்ளார். எனவே அவர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






