தேர்தல் பத்திர விவகாரம்..நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு..!
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புகாரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் தேர்தல் பத்திரம் மூலமாக நிதி திரட்டுவதற்காக பல்வேறு தரப்புகளிடம் இருந்து கட்டாய வசூலில் ஈடுபட்டதாகவும் இதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு அமைப்பை சேர்ந்த ஆதிஷ் ஐயர் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் புகார் கூறியிருந்தார்.
இதை விசாரித்த எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






