கல்லூரி மாணவர்கள் தங்கிய அறைகளில் காவல்துறை சோதனை..!
கோவையில் கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி இருக்கும் இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கோவை சரவணம்பட்டி பீளமேடு குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளின் அருகே மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கியுள்ளனர்.
அவர்களிடம் போதை பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை இருக்கிறதா என்பது குறித்து மாணவர்கள் அல்லாத நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்தனர்.
60க்கும் மேற்பட்ட காவலர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களின் அறைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.






