--- --:--:-- --

கொரொனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரொனா தொற்று ஏற்படுமா?

8

கொரொனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தவர்கள் சிலருக்கு மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வகையில் சென்னையில் ஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு பேருடன் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

கொரொனா தொற்று பாதித்தவர்களுக்கு வேறுவித உடல்நலக் குறைவுகள் வருகின்றனவா ? கொரொனா தொற்றினால் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கொரொனாவில் இருந்து மீண்டவர்கள் சிலருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்படுகிறது.

 

23 ஆயிரம் பேருக்கு இதுவரை கொரொனா சிகிச்சை அளித்து இருக்கும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதுவரை நான்கு பேர் மட்டுமே மீண்டும் தொற்றுடன் வந்ததாக கூறுகிறார். மருத்துவமனை முதல்வர் இராஜன் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய அவர்கள் ஒரே ஒருவருக்கு மட்டும் மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

எழும்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்கிறார் அதன் இயக்குனர். ஆனால் தொற்று நீங்கியவர்களில் வாரம் ஒருவரேனும் மீண்டும் தொற்றுடன் வருவதாக கூறுகிறார் தொற்று நோய் இயல் நிபுணர்கள்.

Leave a Reply

Right Menu Icon