--- --:--:-- --

தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்ட யானைகள் கூட்டம்

4

சத்தியமங்கலம் அடுத்த பெங்களூரு – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையில் முகாமிட்டு இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் எச்சரிக்கையாக பயணிக்க வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தமிழக-கர்நாடக எல்லை வழியாக பெங்களூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் பேருந்து மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து செல்கிறது.

 

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை கூட்டங்கள் கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகளில் இருந்து கீழே விழும் கரும்புகளை தின்பதற்காக யானைகள் சாலையோரம் முகாமிட்டு நிற்கின்றன.

 

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் எனவும், வாகனத்தை விட்டு ஓட்டுநர்கள் இறங்க கூடாது எனவும் வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon