வெங்காயத்திற்கு பதிலாக பயன்படும் முட்டைகோஸ்
சேலத்தில் வெங்காய விலை ஏற்றத்தினால் ஹோட்டல்களில் வெங்காயத்திற்கு பதிலாக முட்டைகோஸ் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சேலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக ஒரு கிலோ வெங்காயம் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெங்காயத்தை வாங்க முடியாத சூழலுக்கு உணவு கடை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வெங்காயத்திற்கு பதில் முட்டைகோஸ் ஓட்டல்களில் பயன்படுத்தப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




