ஆற்றில் குளிக்க சென்ற அண்ணன், தம்பி நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
தஞ்சையை அடுத்துள்ள ஊரணிபுரம் கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்கச் சென்ற பொழுது அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருச்சியை சேர்ந்த தினேஷ், ராஜேஷ் ஆகிய சகோதரர்கள் தஞ்சையில் உறவினர் வீட்டிற்கு வந்த போது கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்துள்ளனர்.
நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்கிய சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இருவரையும் சடலங்களாக மீட்டனர்






