திருமண விழாவில் நடனமாடிய மணப்பெண் உயிரிழப்பு..!
திருமணத்திற்கு முந்தைய ஹல்தி நிகழ்ச்சியில் நடனமாடிய மணப்பெண் நெஞ்சு வலியால் உயிரிழந்த சோக சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது. சகோதரிகளுடன் நடனமாடிய மணப்பெண் தீக்ஷா, திடீரென ஓய்வெடுக்க அறைக்குச் செல்கிறார்.
நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, தீக்ஷா நெஞ்சு வலியால் இறந்து கிடக்கிறாள். சந்தோஷத்தில் மிதந்த குடும்பம் ஒரே நொடியில் சோகத்தில் மூழ்கி இருக்கிறது.



