--- --:--:-- --

ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு.. வீணாகும் குடிநீர்..!

8

சேலத்தில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட தண்ணீர் வீணானதால் மக்கள் கவலை அடைந்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் நீரேற்ற நிலையம் அமைத்து காடையாம்பட்டி பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

 

இதன் மூலம் ஓமலூர் காடையாம்பட்டி தோப்பூர் தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டு 15 நாட்களாக தண்ணீர் வருகிறது.

 

குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon