--- --:--:-- --

மருந்து கடையில் பூட்டை உடைத்து போதை மாத்திரைகள் திருட்டு..!

3

சென்னையில் இரவில் மருந்து கடைகளில் பூட்டை உடைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை திருடியதாக சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

கடந்த 11ஆம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள மருந்து கடை ஒன்றில் பூட்டை உடைத்து 500 ரூபாய் பணம் மற்றும் செல்போன் திருடியது தொடர்பாக விசாரித்து வந்த போலீசார் திருவான்மியூரில் செல்போன் திருடியதாக கைது செய்யப்பட்ட சிறுவன் கோடம்பாக்கம் மருந்து கடை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் என கண்டுபிடித்தனர்.

 

இதையடுத்து சிறுவனை பிடித்து விசாரித்த பொழுது செம்மஞ்சேரி மணி மற்றும் கண்ணகி நகர் அப்பு ஆகிய இருவரும் மெரினா கடற்கரையில் பகல் நேரத்தில் குதிரை ஓட்டிக்கொண்டு திருடிய வாகனங்களில் இரவில் சென்று இதுபோன்ற மருந்து கடைகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon