காதலி பேசாததால் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்..!
விழுப்புரம் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை கழுத்து அறுத்து கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்து பெண் தரணி. இவரும் கணேசன் என்பவரும் மூன்றாண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பேசாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணேசன் கல்லூரி சென்று கொண்டிருந்த மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதில் கல்லூரி மாணவி தரணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தரணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய கணேசனை கைது செய்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





