ஐசியூ கழிவறையில் கழுத்தை நெரித்து ஆண் குழந்தை கொலை..!
திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து ஒரே நாளான ஆண் குழந்தை கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியை கட்டிடத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொது கட்டிடத்தில் அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.
அவசர சிகிச்சை பிரிவில் பிறந்து ஒரே நாளே ஆன ஆண் குழந்தை கழுத்து நெறித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பல கோணங்களில் விசாரணையை கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





