பூண்டி, அணைப்புதூர் ஏ.கே.ஆர் அகாடமி ( சி.பி.எஸ் இ ) பள்ளியில் 74 வது சுதந்திர தினவிழா
திருப்பூர், திருமுருகன்பூண்டி, அணைப்புதூர் ஏ.கே.ஆர் அகாடமி ( சி.பி.எஸ் இ ) பள்ளியில் 74 வது சுதந்திர தினவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தாளாளர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார்.
முதல்வர் மணிமலர், ரோட்டரி மாவட்ட நிர்வாகி சுப்பிரமணீயம் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆசிரியை மினி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சர்வதேச ரோட்டரி சங்க கல்வி உதவி தொகை திட்ட சேர்மன் சிவபிரகாஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ஹரி பிரகாஷ், உதவி செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் – ஆசிரியைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரவல்ல ஹோமோயோபதி மருத்துவ மருந்தான ஆர்சானிக் ஆல்பம் மாத்திரைகளை வழங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் சுப்பிரமணியம் செய்து இருந்தார். முடிவில் ஆசிரியர் கணேஷ் நன்றி கூறினார்.






