அரசு பேருந்துகளில் முன்பதிவு கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும்..!
ஊரடங்கு தினமான 9ஆம் தேதியன்று அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9-ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமையன்று 1,718 பேர் முன்பதிவு செய்திருப்பதாகவும் அவர்களுடைய கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 10ம் தேதிக்கு பிறகு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.





